• Mo. Jul 26th, 2021

நிகழ்வுகள்

  • Startseite
  • சுவிசில் நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை

சுவிசில் நினைவுகூரப்பட்ட கறுப்பு யூலை

இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தி முடிக்கப்பட்ட கொடூரமான காட்டுமிராண்டித்தனமான இனவழிப்பின் ஒரு அங்கமே கறுப்பு யூலை. சுவிஸ் தமிழர் அரசியல் துறை, தமிழ்ப் பெண்கள் அமைப்பு, தமிழ் இளையோர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட இவ் கவனயீர்ப்பு நிகழ்வானது 23.07.2021 அன்று பேர்ண் பிரதான தொடரூந்து நிலையத்தின் முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. கறுப்பு ஜூலை சார்ந்தும், தொடர்ச்சியாக இன்றும் தமிழர் தாயக பகுதிகளில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட இனவழிப்பு தொடர்பாகவும், தமிழின அழிப்புக்கான நீதி விசாரணைகளின் அவசியத்தையும் வலியுறுத்தி வேற்றின மக்களுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

யாழில் கறுப்பு ஜீலை கவனயீர்ப்பு!

தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,  கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?,…

நெதர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டம்

நெதர்லாந்தில் டென்கெல்டர் மாநகரில் 17-07-2021 சனி அன்று  தமிழீழத்தேசிய மாவீரர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பெடுத்தாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 9.30மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த இந்த நிகழ்வு  நெதர்லாந்து  , தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு பின் ஈகைச்சுடரேற்றல் மலர்வணக்கம் அகவணக்கம்…

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2021 -சுவிஸ்

எம் தேசம் காக்க தேசியத்தின் வேலிகளாக நின்று தம்மை ஆகுதியாக்கிய எம் மாவீரச் செல்வங்களின் நினைவுகள் சுமந்து நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளின் துண்டுப்பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கழகங்களையும் , தமிழ் உறவுகளையும் அழைக்கும் முகமாக உங்கள்  இணையத்தளங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு…

புருசல்ஸ் அரசியல் மையங்களில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.(26/07/2021)

தமிழினவழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி புருசல்ஸ் அரசியல் மையங்களில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் , தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையையும், தமிழர்களுக்குத் தமிழீழமே தீர்வு என்பதனையும் வலியுறுத்தி ஐரோப்பிய நாடுகளை ஊக்குவிக்கும் முகமாக 26/07/2021 திங்கள் கிழமை அன்று புருசல் ஐரோப்பிய…

சுவிஸில் மேதகு: திரைப்படம்

சுவிஸில்: மேதகு திரைப்படம் திரையிடப்படுகிறது காணத்தவறாதீர்கள். – „மேதகு“ திரைப்படைப்பினை தங்களது மாநிலங்களின் திரையரங்குகளில் காட்சிப்படுத்த விரும்புபவர்கள் குனேஷ், கொலம்பஸ் ஆகியோருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

கறுப்பு ஜூலை 23.07.2021 – சுவிஸ்

சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்பின் ஓர் அங்கமான „கறுப்பு ஜூலை“ நினைவாக கவனயீர்ப்புப் போராட்டம் 23.07.2021, வெள்ளி பிற்பகல் 15:30 – 17:30 மணி வரை Bahnhofplatz, 3011 Bern எத்தடைகள் வரினும் எமது தாயக விடுதலைக்காய் ஒருமித்துக் குரல்…

எங்கள் தலைவர் பிரபாகரன் என்று ஐ. நா முன்றலில் முழங்கிய தமிழர் படை

இன்றைய தினம் (12.07.2021) பிற்பகல் 15:00-17.00 வரை ஐ. நா முன்றலில் நடைபெற்றுக்கொண்டுள்ள கவனயீர்ப்பு ஒன்றுகூடல் தொடரும் தமிழின அழிப்பை வெளிக்கொணரவும், காலத்தின் தேவை கருதிய இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் அவசியத்தை உணர்ந்து அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்துளளார்கள்

கேணல். சங்கர் அவர்களின் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி

கேணல். சங்கர் அவர்களின் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம் மற்றும் வளர்ந்தோர் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2021 சுவிஸ் – 17.07.2021

கரும்புலிகள் நாள் நினைவு சுமந்த சிறப்பு ஒளிபரப்பு

யூலை 5 தெய்வீகப் பிறவிகளான கரும்புலிகள் நாளை  நினைவுகூறும் வகையில்  Ttn தமிழ்  ஒளி  தமிழ்த்தேசியதொலைக்காட்சியில்  சிறப்பு  ஒளிபரப்புகளாக நடைபெற்றுகின்றன.  

கவனயீர்ப்பு ஒன்றுகூடல் 12.07.2021 முருகதாசன் திடல், Geneva

47வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி… *கவனயீர்ப்பு ஒன்றுகூடல்* ​ 12.07.2021; திங்கள் பிற்பகல் 15:00 – 17:00 மணி வரை ஈகைப்பேரொளி முருகதாசன் திடல், UNO Geneva அனைவரையும் அழைக்கின்றார்கள்.