• Sa. Sep 18th, 2021

கறுப்பு யூலை – தமிழ்மக்களின் மனதில் ஆழப்பதிந்த வடு. – சிவசக்தி

Jul 23, 2021

தமிழீழப் போராட்டத்தின் வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு மறக்கமுடியாத ஆண்டாக வரலாற்றில் நிலைத்திருக்கிறது. இந்த ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தன்னுடைய படைத்துறை மற்றும் அரசியல் நடவடிக்கைகளை செறிவுபடுத்;திக்கொண்டார்கள் என்றே சொல்லலாம். இதன் வெளிப்பாடாகவே பருத்தித்துறையிலும் உமையாள்புரத்திலும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தினார்கள். அதேவேளை இந்த ஆண்டில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களைப் புறக்கணிக்குமாறு தமிழ்மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

தமிழ்மக்ககளை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகும் சிங்கள அரசின்மீது பெருங்கோபங் கொண்டிருந்த தமிழ்மக்கள்> விடுதலைப்புலிகளின் கோரிக்கைக்கு செவிசாய்த்து உள்ளுராட்சித்தேர்தல்களைப் புறக்கணித்தனர். நல்லூரில் தேர்தல் வாக்களிப்பு நிலையம்மீதும் போராளிகளின் தாக்குதல் நடந்தது.
சீற்றங்கொண்ட சிங்கள அரசு தமிழ்மக்களின்மீது தனது தாக்குதல்களைத் தொடுத்து, உயிர்களையும் உடைமைகளையும் சேதமாகமாக்கியது. தமிழ்மக்களின் வாழ்மனைகளும், வழிபாட்டுதத்தலங்களும் சிதைக்கப்பட்டன. சிங்கள ஆயுதப்படையினர் தமிழ் இளைஞர்களுக்கெதிராக ஏவிவிடப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக 1983 யூலை 15 அன்று சாவகச்சேரியின் மீசாலைக்கிராமத்தில் மறைந்திருந்த போராளிகளைக் குறிவைத்து சிங்களப்படைகள் பாய்ந்தன. எதிர்த்துப்போராடிய நிலையில்,எதிரிப் படையின் குண்டை நெஞ்சில் தாங்கிகிக் கொண்ட போராளி சீலன்,தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தை எடுத்துச்செல்லுமாறு தோழர்களைப் பணித்தான். தாக்குதற் தளபதியின் கட்டளை அது. கனத்த மனதோடு , சீலனைச் சுட்டுவிட்டு ஏனையோர் முற்றுகையிலிருந்து வெளியேறுகின்றனர்.
சீலன். தேசியத் தலைவரின் நெருக்கமான தொடக்ககால நண்பன். அமைப்பின் முதலாவது தாக்குதற் தளபதி. சீலனின் இழப்பு தேசியத்தலைவரையும் ஏனையபோராளிகளையும் உசுப்பிவிடுகிறது. தான் நேசிக்கும் தமிழ்மக்களின்மீதும் போராளிகள் மீதும் தாக்குதல் தொடுக்கும் சிங்களப் பேரினவாதத்திற்குப் பாடம் புகட்ட தலைவர் தேதிகுறித்தார்.
அந்தநாள்தான் யூலை 23. மாதகல் படைமுகாமிலிருந்து, திருநெல்வேலியை நோக்கி வந்துகொண்டிருந்த படையினரின் ஊர்திகள் இலக்குவைக்கப்பட்டன. நிலக்கண்ணிவெடி அதிர்ந்தது. இலக்குத்தவறாத அந்த வெடிப்பில் 13 படையினர் கொல்லப்பட்டார்கள். ‚ அவலத்தை தந்தவனுக்கு அதையே பரிசளிப்போம்‘ என்ற செய்தி சிங்களப் பேரினவாதத்தின் முகத்தில் அறைந்தது.
அன்றைக்கு தன்னை சிங்கள பௌத்தத்தின் காவலனாக அடையாளப்படுத்திக்கொண்டு, தமிழர்களை அடக்கிஒடுக்கி ஆட்சிபீடத்திலிருந்த ஐனாதிபதி  ஜெ.ஆர். ஜெயவர்த்தனவுக்கு இச்செய்தி பெரும் அவமானத்தை கொடுத்தது. தமிழ் இனத்தை இலங்கைத்தீவிலிருந்து இல்லாதொழிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டியிருந்த  ஜெயவர்த்தனா அந்தப் 13 படையினரின் இழப்பை ஊதிப் பற்றவைத்தார்.
இலங்கையின் தென்பகுதிமுழுவதும் காட்டுத்தீயாகச் செய்திகள் புனையப்பட்டன. ‚ சிங்கள பௌத்தர்கள் அல்லாதோர் இலங்கைத்தீவில் வாழும் உரிமையற்றவர்கள் ‚ என்ற துட்டகைமுனுவின் எண்ணத்தை nஐயவர்த்தனா படையினரின் செவிகளில் உரத்து ஓதினார். இலங்கை அரசின் ஏவற்பேய்கள் தமிழர்களின் கூரைகளை நோக்கிப் பாய்ந்தன.
மறுநாள், யூலை 24 ஆம்நாள் திருநெல்வேலியிலும் கந்தர்மடத்தடியிலும் 60 இற்கும் மேலான தமிழர்கள் படையினரால் கொல்லப்பட்டார்கள். அதேநேரம் திருநெல்வேலி கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்ட படையினரை, வீராதிவீரர்களாக அறிவித்து, சிங்கள மக்களையும் இனவாதிகளையும் தூண்டிவிட்டார் ஜெயவர்த்தனா.
அவரின் இலக்கு மெல்லமெல்லப் பெரிதானது. அவரே எண்ணியதுபோல தென்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள்மீது சிங்கள இனவாதம் பாய்ந்தது. தமிழர்களின் வீடுகள்> வணிகநிலையங்கள்> தொழிலகங்கள், எரிபொருள்நிரப்பு நிலையங்கள் என எல்லாம் நொடியில் அடித்து நொருக்கப்பட்டன. இனவாதத்தீ பற்றி எரிந்தது. கேட்பாரற்ற நிலையில் தமிழர்கள் பல ஆயிரக்கணக்கில் உயிரிழந்தனர். இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டனர். தமிழ்ப் பெண்கள்மீது பாலியல்வன்முறைகளும் இடம்பெற்றன.
சிங்கள அரசின் காவல்படையினர் தமிழ்மக்களுக்கு உதவிபுரியாது , இனவாதிகளுக்கும் காடையர்களுக்கும் உறுதுணை செய்தனர் என்பதை அப்போது ,வெளி ஊடகங்கள் பதிவுசெய்தன.
இந்த இனவெறியாட்டம் வீடுகளில் இருந்த தமிழர்களை மட்டுமல்ல, சிறையில் இருந்த தமிழர்களையும் இலக்குவைத்தது. யூலை 25 இல் 25 தமிழ்க்கைதிகளும்> யூலை 27 இல் 17 தமிழ்க் கைதிகளும் மிகக்கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைபெறும் தமிழீழத்தை தம்கண்களாற் பார்க்கவேண்டும் என்று விருப்புற்றுச் சொல்லியிருந்த காரணத்துக்காகவே குட்டமணி, ஜெகன் என்கின்ற இரு தமிழ்க்கைதிகளின் கண்களை தோண்டியெறிந்தனர் இனவாதிகள். தன்னுடைய மூக்குக்கண்ணாடியை உயர்த்திவிட்டவாறே ‚ தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் யாவும் சிங்கள மக்களின் இயல்பான உணர்வுகளின் வெளிப்பாடுதான்‘ என்றார் nஐயவர்த்தனா. அத்தோடு அவர் நிறுத்திவிடவில்லை. ஒரு ஐனாதிபதியாக இருந்துகொண்டு> ‚ தமிழ்மக்களின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பாளியல்ல‘ என்றும் கூச்சமின்றிச் சொன்னார் என்பதும் வரலாறே.
இத்தகைய இனப்படுகொலைகளும்> இனவாதச் செயற்பாடுகளுமே தமிழ்மக்களை தனிநாட்டுக்கான போராட்டத்தில் ஈர்ப்புக்கொள்ளச் செய்தன. முறைக்குமுறை தமிழர் சொத்துக்களை அழிப்பதும், தமிழ்மக்களை கொன்றுகுவிப்பதும் இளைஞர்களை
கைதுசெய்துசிறையிலடைத்து துன்புறுத்துவதுமெனச் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் செய்த செய்துகொண்டிருக்கின்ற சூழல்தான் இன்னமும் தமிழர்களை விடுதலையின் பாதையில் இணைத்துச்; செல்கிறது.
உலகம் முழுவதும் பரந்துவாழ்ந்தபோதிலும், தாயகம் என்னும் தன்னுணர்வுமிக்கோராய், தேசிய இனமாகத்திகழும் ஈழத்தமிழர்களாகிய எங்களை பல்வேறுவகையில் பிரித்து வரலாறற்றவர்களாக்கிவிட இன்னமும் துடிக்கிறது சிங்களப் பேரினவாதம். தமிழர்களை ஒன்றுபடவிடாது பலவகையிலும் முயற்சித்துநிற்கும் பேரினவாதத்தின் முகத்திரையைக் கிழித்து  எமது அடுத்த தலைமுறையினரிடம் உண்மையான வரலாற்றைக் கையளிக்கவேண்டிய பாரிய பொறுப்புமிக்கவர்களாக இன்றைய தலைமுறையினர் வேகங்கொள்ளவேண்டும்.
ஈழத்தமிழினத்தவர்கள் மீது சுமத்தப்படுகின்ற வீண்பழிகளையும், குற்றச்சாட்டுகளையும் உடைத்தெறிய உண்மையானவரலாறு எங்களிடம் சான்றாக இருக்கிறது. மானம் பெரிதென்று உயிரீந்து சென்ற மறவர்களின் கனவுகள் எம்வரலாற்றின் பக்கங்களில் பாடங்களாக விரிந்து கிடக்கின்றன. எமது இனத்தையும் போராட்டத்தையும் பழித்தும் இழித்தும் நிற்பவர்களுக்கு  எமது வரலாற்று நிகழ்வுகளையே பதிலாக்குவது எமது பணியாகிறது.
எமது இனமும் நிலமும் விடுதலைபெறும் வரை ஓயாதபுயலாய் வீசி> உரத்துக்குரல் எழுப்பி> வெற்றிபடைப்போம். வரலாறு எப்பொழுதும் எமக்கு வழிகாட்டிநிற்கும்.
 சிவசக்தி 

sts