• Mo. Jul 26th, 2021

நெதர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டம்

Jul 20, 2021
நெதர்லாந்தில் டென்கெல்டர் மாநகரில் 17-07-2021 சனி அன்று  தமிழீழத்தேசிய மாவீரர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பெடுத்தாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சுமார் 9.30மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த இந்த நிகழ்வு  நெதர்லாந்து  , தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டு பின் ஈகைச்சுடரேற்றல் மலர்வணக்கம் அகவணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து கழகங்களின் துடுப்பெடுத்தாட்டம் வெகு விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்போட்டியில்
3ம் இடத்தை டைனமிக்ஸ் விளையாட்டுக் கழகமும்
2ம் இடத்தை எல்லாளன் விளையாட்டுக் கழகமும்
1ம் இடத்தை மொக்கூஸ் விளையாட்டுக் கழகமும் பெற்றுக்கொண்டன
வெற்றிபெற்ற கழகங்களுக்கு வெற்றிப்பதக்கங்களும் வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டு சுமார் 21.00மணியளவில் தேசியக் கொடிகள் கையேற்கப்பட்டு இறுதியில் எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற கோசத்துடன் இனிதே நிறைவெய்தியது.  

sts

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.