Press "Enter" to skip to content

தமிழீழத்தின் வான்புலிகள் நுண்ணறிவு அசாத்தியமான திறன் கொண்டவர்கள்

படத்திலிருப்பது அமெரிக்காவின் B-2 வகை தாக்குதல் விமானம். கழுகை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இவ்விமானம் முதல் பறப்பிலே வீழ்ந்து நொருங்கியது. பின்னர் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன.
இதன் முன்புற ஆடிகள் 24 Kt தங்கத்தால் செய்யப்பட்டவை. ஒளிஊடுவும் தாக்குதல் கருவிகள் மூலம் இவ்விமானம் கண்டுபிடிக்கப்படக்கூடாது என்பதுவே அதற்கான காரணம். இதன் ஊடுருவலை நவீன கண்காணிப்புக்கருவிகளால் (Radar) அறியமுடியாது.
லிபியா மீது முதலாவது தாக்குதல் நடத்தியது இந்தவிமானங்களே. அமெரிக்காவின் Missouri இராணுவத்தளத்திலிருந்து 9000 km தொலைவிலுள்ள லிபியாவிற்குள் நுழைந்த மூன்று B-2 வகை விமானங்கள் தாக்குதல் நடாத்தின. இதில் ஒருவிமானத்தின் ஏவுகணை உந்தும்பகுதி செயலிழந்து போனநிலையில் சிலகுண்டுகளை மாத்திரமே அதனால் வீசமுடிந்தது. லிபியா முதன்முதலாக நிலைகுலைந்தது இவ்விமானங்களின் தாக்குதலினாலேயே ஆகும். தொடர்ச்சியாக 24 மணிநேரப் பறப்பில் ஈடுபட வல்லவை இந்த விமானங்கள்.
கண்காணிப்புக்கருவிகளில் இவ்விமானம் அடையாளப்படாமல் பறப்பதற்கும், கதிரியியங்களிலிருந்து இந்தவிமானம் தப்பிப்பதற்கும் அடிப்படை இவ்விமானத்தின் மேல் பூசப்பட்டிருக்கும் இல்மனைற் எனப்படும் கனிமமே காரணமாகும். தமிழீழத்தின் கிழக்குக் கடற்கரைகளில் இந்தத்தாது தாராளமாகக் கிடைக்கிறது. இல்மனைற் அள்ளவந்த யப்பானியக் கப்பலொன்றை கடற்புலிகள் துரத்தியடித்தமை பலருக்கு நினைவிருக்கலாம்.
தமிழீழத்தின் வான்புலிகள் தமது தளத்திலிருந்து சென்றுதாக்கிய விமானங்கள் வெகு சாதாரணமானவை. ஆனால் அவ்விமானங்களை சிறிலங்கா அரசு வைத்திருந்த கண்காணிப்புக் கருவிகள் ஒருபோதும் கண்டறிந்ததில்லை. அதற்குக் காரணம் வான்புலிகளின் திட்டமிடுதலும் நுண்ணறிவுமே காரணம். ஆகக்குறைந்த உயரத்தில் பறந்து , இலக்குகளை அண்மித்ததும் திடீரென உயரப்பறந்து தாக்கும் இந்த உத்தி உலகிற்கே சற்று ஆச்சரியமானதுதான். கொழும்பின் தலைக்குமேல் புலிகள் வந்தபிறகு விளக்குகளை அணைத்துவிட்டு கண்மூடித்தனமாக ஆகாயம் முழுவதையும் ஓட்டைபோடுவதில் இலங்கை விமானப்படைக்கு நிகர் யாருமில்லை.
எவ்வளவுதான் நவீனங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் தமிழர்களின் நுண்ணறிவு அசாத்தியமான திறன் கொண்டது என்பதில் மிகையில்லை.

Be First to Comment

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.